search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை அபேஸ்
    X
    நகை அபேஸ்

    கோவையில் ஓடும் பஸ்சில் ரூ.44 லட்சம் நகை அபேஸ்

    கோவையில் ஓடும் பஸ்சில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை செட்டிவீதி அய்யப்பா நகரை சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் அதே பகுதியில் முரளிநரசிம்மன் என்பவர் நடத்தி வரும் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் நகைகளை முரளி கர்நாடகம் மற்றும் வெளியூர்களில் உள்ள நகைகடைகளில் விற்பனை செய்து வழக்கம். கடந்த 24-ந்தேதி ஆபரண தங்க நகைகளை எடுத்துக்கொண்டு கர்நாடக மாநிலத்துக்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்டார்.

    கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்தார்.

    பின்னர் மீதமுள்ள செயின், நெக்லஸ், வளையல் உள்ளிட்ட ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகளை பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார்.

    இன்று காலை (29-ந்தேதி) கோவை பஸ் நிலையம் வந்து நகை பையை திறந்து பார்த்தபோது ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் அனைத்தும் மாயமாகி விட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    ஓடும் பஸ்சில் நகைகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முரளி நகை பட்டறை உரிமையாளருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்தவர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×