search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காட்டுயானைகள் நடமாட்டம்: இரவு நேரத்தில் வெளியில் செல்லவேண்டாம் - வனத்துறையினர்

    ஆடலூர்-கே.சி.பட்டி பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதால் பொதுமக்கள் இரவுநேரத்தில் வெளியில் நடமாடவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கே.சி.பட்டி-ஆடலூர், மருமலை, பெரியூர், நடுப்பட்டி, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பள்ளத்துக்கால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கள் புகுந்து வருகிறது.

    குறிப்பாக காட்டுயானைகள் தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து அங்கு பயிரிடப்பட்டிருந்த காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் ஆடலூர், கே.சி.பட்டி பகுதியில் சில தினங்களாக 7 யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து அங்கு பயிரிடப்பட்டிருந்த காப்பி, வாழை பயிர்களை சேதப்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனச்சரகர் ரவிசந்திரன் தலைமையில் வனவர் தண்டபாணி, வனகப்பாளர் சங்கர் மற்றும் வனஊழியர்கள் கே.சி.பட்டி, ஆடலூர், அரியமலை வனப்பகுதியில் இருந்து சிறுவாட்டுகாடு வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இதில் குட்டியுடன் ஒரு யானை சுற்றி திரிகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தடுக்கவும், பகல் நேரத்தில் பார்த்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×