என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்12 Sep 2019 4:14 PM GMT (Updated: 12 Sep 2019 4:14 PM GMT)
களக்காடு அருகே முன் விரோத தகராறில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ஐந்துகிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான பைக்கை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பைக் தீயில் கருகி நாசமான நிலையில் கிடந்தது. இரவில் மர்ம நபர்கள் அவரது பைக்கிற்கு தீ வைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் குமாரின் மனைவி பாக்கியசெல்வி அங்குள்ள பொது குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த போது, அவருக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக குமாரின் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து குமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கிற்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×