search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க தமிழ்ச்செல்வன்
    X
    தங்க தமிழ்ச்செல்வன்

    தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க தமிழ்ச்செல்வன்- வி.பி.கலைராஜனுக்கும் பொறுப்பு

    அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து, கொள்கை பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுகிறார்.

    திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜன்

    கட்சியின் இலக்கிய அணி இணை செயலாளராக வி.பி.கலைராஜனும், நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×