search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்திற்கு வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    சேலத்திற்கு வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின்

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக திமுக பணியாற்றி வருகிறது- மு.க.ஸ்டாலின்

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.க. தான் மக்களுக்காக பணியாற்றி வருகிறது என்று சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    சேலம்:

    சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் ஒன்றியத்தை சேர்ந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 125 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதைப்போல் நாமக்கல்லை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இவர்கள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    நான், எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், ஆட்சியில் இருந்து என்ன என்ன காரியங்கள் செய்ய முடியுமோ?, அந்த காரியங்களை ஆற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னாலும், அதையெல்லாம் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியோடு எடுத்து சொல்லக்கூடிய பல்வேறு போராட்ட வியூகங்களை அமைத்து, தொடர்ந்து தி.மு.க. அந்த பணியை செய்து கொண்டிருக்கிறது.

    ஆகவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.க. தான் மக்களுக்காக பணியாற்றி வருகிறது. இந்த காரணத்தினால் தான் நீங்கள் இன்றைக்கு பல்வேறு கட்சியில் இருந்து விலகி, நம்முடைய தி.மு.க.விற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

    உங்களை சேலம் மத்திய மாவட்டத்தின் சார்பிலும், ஓமலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பிலும் நான் வரவேற்கிறேன்.

    எந்த நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்தீர்களோ, அந்த நம்பிக்கையோடு நீங்கள் பணியாற்றுங்கள். எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றக் கூடிய உங்களுக்கு பல பொறுப்புகள் வந்து சேரும்.

    அப்போது, தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, நிர்வாகி சுப்புலட்சுமி ஜெகதீசன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×