என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வல்லம் அருகே நடந்து சென்ற காவலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  வல்லம்:

  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூரை சேர்ந்தவர் பழனிமுத்து (வயது 55). இவர் வல்லம் அருகே வடக்குப்பட்டில் உள்ள கடலை மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  இவர் கடந்த 11-ந் தேதி வடக்குப்பட்டில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பழனிமுத்துவின் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பழனிமுத்து பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

  இதனையடுத்து பழனிமுத்துவின் மகன் பாலகிருஷ்ணன் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×