search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி பலி"

    • யூனியன் அலுவலக காவலாளி குடிபோதையில் தவறிவிழுந்து இறந்தார்.
    • மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கீழமஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(30). இவருக்கு திருமணமாக வில்லை. ஆண்டிபட்டி யூனியன் அலுவலகத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று இரவு பணிக்கு முருகன் வந்துள்ளார்.

    அங்கு சேர்மன் அலுவல கம் முன்பு குடிபோதையில் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலை அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்த போது முருகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (62). இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலை யில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் இடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே வெங்கடே சனின் மகன் பாலாஜி (43) நேற்று காலை தந்தையை காண அவர் பணியாற்றும் இடத்திற்கு வந்தபோது தான் விபத்து நடந்தது குறித்து அருகில் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.

    பின்னர் இது குறித்து குமாரபாளையம் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
    • இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் கொங்கனபாளி யை சேர்ந்தவர் ராமசாமி (54). காவலாளி. இவர் கடந்த மாதம் 13-ந் தேதி முத்தம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போதையில் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்தார்.

    அப்போது அவர் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பில் காயம் அடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்சு மூலமாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.
    • தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பலியானது தெரிய வந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது39). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் போடி மரிமூர் கண்மாய் அருகே உள்ள வாய்க்காலில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பகுதியில் உள்ள தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பாலாஜி பலியானது தெரிய வந்தது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் குரங்கணி போலீசார் விரைந்து வந்து பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தோட்ட உரிமையாளர் சடையன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது38). இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இன்பராஜ், அழகுராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    மாரியப்பன் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவும் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.

    மாரியப்பன் வேலை பார்க்கக்கூடிய மாந்தோப்புக்கு அருகில் மற்றொரு நபரின் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக, தோட்டத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.

    இதனை அறியாத மாரியப்பன், அந்த தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மாரியப்பன் தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை இன்று காலை தோட்டத்துக்கு சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதையடுத்து அவரது உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் இறந்து கிடந்த தோட்டத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று மின்வேலி அமைத்திருந்தாரா அல்லது அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக அமைத்து உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் மாரியப்பன், தான் வேலை பார்த்த தோட்டத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேரத்தில் சென்றது ஏன்? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.
    • திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள நங்கவள்ளி, வீரக்கல் கீழ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (55). இவர் கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வங்கி முன்பு நகராட்சி சார்பில் தோண்டப் பட்ட திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க சாமி (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்கசாமி நேற்று இரவு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வேலை முடிந்து இன்று காலை 5.45 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சத்திய மங்கலத்தில் இருந்து பவானிசாகருக்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அவர் சத்திய மங்கலம் பவானிசாகர் ரோட்டில் வந்தார். அப்போது அந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியி லேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெகதீஸ்வரன் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காைர தேடி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    ஈரோடு மாவட்டம் நந்தவனம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 31). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நந்தனார் காலனி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெகதீஸ்வரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெகதீஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரான் (68). காவலாளி. சம்பவத்தன்று இவர் வடக்கிப் பாளையம் பிரிவு ரோட் டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடை யாளம் தெரியாத கார் ஆரான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காைர தேடி வருகிறார்கள். 

    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக காவலாளி வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார்.
    • இதுபற்றி அவர்கள் தீவிரமாக துப்புதுலக்கினர்.

    சிதம்பரம், நவ.17-

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமாரமங்கலம் ராதாநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இந்த ஆடுகள் காணாமல்போனது. எனவே ராமசாமி ஆடுகளை தேடி இரவு நேரத்தில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மகன் கார்த்திகேயன் தனது தந்தையை தேடினார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மருநாள் குமாரபுரம்-நடராஜபுரம் வடிகால் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது பற்றி அவர்கள் தீவிர மாக துப்புதுலக்கினர். இந்த தகவல் கார்த்திகேயனுக்கு எட்டியது. அவர் உடனடியாக வடிகால் வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அப்போது தனது தந்தையின் உடலை போலீசாருக்கு அடை யாளம் காட்டினார். அண்ணாமலை பல்க லைக்கழக காவலாளியான ராமசாமி வடிகால் வாய்க்காலில் தவறிவி ழுந்தபோது தலையில் அடிபட்டுள்ளது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • ஒரு கார் முருகன் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் முருகன் சிறுவலூர்- பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்டு திருவள்ளூர் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூரை சேர்ந்தவர் ஆனந்த வேல் (56). மப்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வேலையை முடித்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கீழே இறங்கியபோது திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்டு திருவள்ளூர் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில்குமார் மப்பேடு போலீசில் சரண் அடைந்தார். கடம்பத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோவன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×