குமாரபாளையத்தில் வாகனம் மோதி காவலாளி பலி

சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
குமாரபாளையத்தில் வாகனம் மோதி காவலாளி பலி
Published on

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (62). இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலை யில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் இடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே வெங்கடே சனின் மகன் பாலாஜி (43) நேற்று காலை தந்தையை காண அவர் பணியாற்றும் இடத்திற்கு வந்தபோது தான் விபத்து நடந்தது குறித்து அருகில் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.

பின்னர் இது குறித்து குமாரபாளையம் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com