மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த காவலாளி பலி

பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த காவலாளி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் கொங்கனபாளி யை சேர்ந்தவர் ராமசாமி (54). காவலாளி. இவர் கடந்த மாதம் 13-ந் தேதி முத்தம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போதையில் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்தார்.

அப்போது அவர் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பில் காயம் அடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்சு மூலமாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com