search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது

    கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாநகர போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பூங்காக்கள், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பொது இடங்கள், தனியார் வீடுகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க மாநகர கமி‌ஷனர் சுமித் சரண், குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர் தலைமையிலான சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் சந்தன மரக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். விசாரணணயில் அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராமலிங்கம் (37)அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பது தெரியவந்தது.

    கோவையில் நடைபெற்ற சந்தன மரக்கடத்தலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் ரெயில் மூலமாக கோவைக்கு வந்து சந்தன மரங்களை வெட்டி வேலூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களுடன் மேலும் சிலரும் சந்தன மரம் கடத்த கோவைக்கு வந்து உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×