என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே உள்ள உலுப்பகுடி வேலாதம்பட்டியைச் சேர்ந்தவர் மதியவீரன் (வயது 47). இவரது மகன் குணசேகர பாண்டியன் (21). இவர்கள் 2 பேரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். கணவாய்பட்டி பங்களா அருகே சென்ற போது சாலையோரம் தண்ணீர் தூக்கி வந்த அழகம்மாள் (65) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட அழகம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

  பைக்கில் வந்த தந்தை மற்றும் மகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×