search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் ஊட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவு
    X
    மழையால் ஊட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவு

    நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

    நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் அதிக மழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது:-

    நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்

    வங்க கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி குஜராத் அருகே நிலைகொண்டுள்ளது. வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் தென் தமிழக கடலோர பகுதி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். 

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செமீ மழை பெய்துள்ளது. மேல்பவானியில் 19 செமீ மழை பதிவாகி உள்ளது. அவலாஞ்சியில் படிப்படியாக மழை குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×