search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வானிலை ஆய்வு மையம்"

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    24 மற்றும் 25-ந்தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    26.04.2024 மற்றும் 27.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் 25-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், இதர தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 25-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • அதிகாலையில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம்.

    அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் இன்று மற்றும் நாளை அதிகாலையில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    நாளை (ஜனவரி 4, ஜனவரி5) மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதே போன்று இன்று நாளை முதல் ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் கிண்டி, மாம்பலம், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோபல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,

    விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.
    • 4 மாத காலத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி வட மாநிலங்களில் பெய்தது. தமிழகத்திலும் பரவலாக மழை பெய்ததால் தண்ணீர் பிரச்சனை ஏற்படவில்லை.

    ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

    சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. 4 மாத காலத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதியில் இருந்து கடந்த 10-ந்தேதி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக உருவாகி உள்ளது. இதற்கிடையில் வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது 23-ந் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தொடங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் அடையாளமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் லேசான மழையும் ஒருசில நேரங்களில் கனமழையும் பெய்தது.

    • அடுத்த 2 நாட்களில் தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
    • நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வரும் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைகண்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று புயலாக வலுப்பெற்றது. நாளை (22-ந் தேதி) மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். பின்னர், வரும் 24-ந்தேதி தெற்கு ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை மறுநாள் (23-ந் தேதி) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரபிக்கடலில் உருவாகிய புயலுக்கு தேஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியா வழங்கிய பெயராகும். இந்தி, உருது மொழியில் தேஜ் என்றால் வேகம் என்று அர்த்தமாகும்.

    அதுபோல வங்கக்கடலில் உருவாக இருக்கும் புயலுக்கு ஹாமூன் என்று பெயரிடப்பட இருக்கிறது. இந்த பெயரை ஈரான் நாடு வழங்கி உள்ளது.

    ஹாமூன் புயலால் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்க வாய்ப்பு இல்லை. அது வங்கதேசம் நோக்கி நகரும் என்பதால் சென்னைக்கு அதிக மழை கிடைக்காது என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20-ந் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 18 ந் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19ந் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 20ந் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் ஒரு சில இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.  சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.
    • சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 12 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 11 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, மேமாத்தூர் பகுதிகளில் 10 சென்மீட்டர் மழை பெய்துள்ளது. 

    • 24-ந்தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். 23-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    24-ந்தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    25-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    இன்றும், நாளையும் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அதாவது வருகிற சனிக்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்வது அதிகரித்து உள்ளது.

    ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் வழக்கமாக 56 மி.மீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த 19-ந்தேதி ஒரே நாளில் 82.1 மி.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை ஆகும்.

    வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு மழை பெய்தது. நேற்று மாலை 6 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. செங்குன்றம். திருவாலங்காடு, தாம்பரம் பகுதிகளில் அதிக மழை பெய்தது. விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.

    இன்று காலையிலும் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

    வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அதாவது வருகிற சனிக்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    கன மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள சாலையோர மழை நீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    மழை தொடர்பான புகார்களை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.

    தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 336 மி.மீ மழை இயல்பாக பெய்யும். இது மாநிலத்தின் மொத்த மழை அளவில் 35.84 சதவீதம் ஆகும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 20-ந் தேதி வரை 65.7 மி.மீ மழை பெய்துள்ளது. இது இந்த காலக்கட்டத்தில் பொதுவாக பெய்யும் இயல்பான மழை அளவை காட்டிலும் 85 சதவீதம் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.
    • தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும் கோடை வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமலேயே இருந்துவருகிறது. தமிழகத்தில் இந்த வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அதற்கு மறுநாளும் (புதன்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    ×