என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    X

    தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    • கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இதேபோல், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை அடுத்த சில தினங்களில் வலுப்பெறும். மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக கூடும். இது, 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×