என் மலர்
நீங்கள் தேடியது "Meteorology Centre"
- சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
- தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நாளை கிருஷ்ணகிரி, திருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றுடன் சென்னையில் மழை ஓயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
- வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நலையில், தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 23ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 24ம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கலப்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சியில் வரும் 26, 27, 28ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் வரும் 26, 27, 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த சில தினங்களில் வலுப்பெறும். மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக கூடும். இது, 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்யும்.
- வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனைத்தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, இந்த பகுதிகளில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும். இதன் தொடர்ச்சியாக வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.






