என் மலர்
நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மையம்"
- மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ., காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
- ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26-ந்தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, "மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ள மோன்தா தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ., காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 340 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.
மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 23ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 24ம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கலப்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சியில் வரும் 26, 27, 28ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் வரும் 26, 27, 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை.
- 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.
- திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.
சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தவெளி, பட்டினப்பாக்கம், பாரிமுனையில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மேக மூட்டமாக காணப்படுகிறது.
சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம்.
- வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 11 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 30ம் தேதி சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் இந்தாண்டு புயல் ஆபத்தும் இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு காலக்கட்டத்தில், குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் வலி மண்டலம் மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளை பார்க்கும்போது, நமக்கு லா நினோ உருவாக வாய்ப்புள்ளது.
இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) பொறுத்தவரையில் எதிர்மறை ஐஓடி நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாக அமைந்திருக்கிறது. 2023ம் ஆண்டில் மட்டும் எல் லினோ ஆண்டுகளாகவும் அமைந்துள்ளது.
இந்த லா நினா மற்றும் அதன் காரணிகளை பார்க்குமபோது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும், பருவமழை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும். தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழை பொழிவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லா நினா:
பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள தண்ணீர் சில பகுதிகளில் சூடாகவும், சில பகுதிகளில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.
இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல் நினோ மற்றும் லா நினா வானிலை நிகழ்வுகள் ஆகும்.
எல் நினோ:
எல் நினோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடலின் வெப்பநிலையை வழக்கத்தை விட சூடாக்குகிறது, குறைந்தது 0.5 டிகிரி அதிகரித்தால் எல் நினோ உருவாகியதாக அறிவிக்கப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்யில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது.
- 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தபோது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை சீர்காழி அருகே கரையை கடந்து தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

29, 30, டிசம்பர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது விட்டுவிட்டு மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட நிச்சயமாக அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை வரை வடகிழக்கு பருவமழை பெய்ய சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 2 நாட்களில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-
வியட்நாம், தாய்லாந்தை யொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு பரவுகிறது.
மேலும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசுவதால் அந்தமான் கடல் பகுதியில் அடுத்து 2 நாட்களில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளது. #Rain #TN








