30 மாவட்டங்களில் இரவு 11.15 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
30 மாவட்டங்களில் இரவு 11.15 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர், பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று இரவு 11.15 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, ஈரோடு, தேனி, நாமக்கல், நெல்லை மாவட்டங்களில் இரவு 11.15 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com