search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோப்கார்
    X
    ரோப்கார்

    பழனி மலைக்கோவில் ரோப்கார் பராமரிப்பு பணியை சென்னை வல்லுனர் குழு ஆய்வு

    பழனி மலைக்கோவில் ரோப்கார் பராமரிப்பு பணி சென்னை வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.
    பழனி:

    ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மின்இழுவை ரெயில், ரோப்கார் போன்றவைகள் உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் செல்லுவதால் ரோப்காரை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாதந்தோறும் ஒரு முறையும் , வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். தற்போது கடந்த 29 ந்தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த ஸ்கேனர் என்ற நிறுவனத்திலிருந்து வல்லுனர்கள் உதிரிபாகங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து ரோப்கார் பெட்டிகள், கம்பி வடம் , சக்கரம் போன்றவற்றின் தன்மைகளை ஆய்வு மேற் கொள்ளப்படும் என கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×