என் மலர்

  செய்திகள்

  முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன்
  X
  முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன்

  முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் இன்று காலமானார்.
  மதுரை:

  முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெனிபர் சந்திரன் காலமானார்.  

  ஜெனிபர் சந்திரன்  1996 ஆம்  ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

  2004 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய ஜெனிபர் சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.  கடந்த மக்களவைத் தேர்தலின் போது, ஜெனிபர் சந்திரன் மீண்டும் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×