என் மலர்
செய்திகள்

மாயம்
காவேரிபட்டணத்தில் கல்லூரி மாணவி மாயம்
காவேரிபட்டணத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்த 19 வயது கொண்ட பெண். இவர் மாட்லாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந் தேதி அன்று மாலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் காவேரிபட்டணம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவி அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விஜய் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story