search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் புகார்"

    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திருப்பதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்ப வில்லை.

    சிறுமியை அவர்கள் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து குடியாத்தம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயி. இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார்.

    நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்3 மாத ஆண் குழந்தை திடீரென்று இறந்தது அந்த கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டேனியல்பாபு, அந்தோணியம்மாள் கூலி வேலை செய்து வருகி ன்றனர்.
    • வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த டேனியல்பாபு, அந்தோணியம்மாள். கூலி வேலை செய்து வருகி ன்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். முதல் 2 பெ ண்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது பெ ண்ணான ஆஷா (19). இவர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியி ல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று பெற்றோருடன் வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஷாவை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஆஷாவை தேடி வருகின்றனர்.

    • சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.
    • வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது.

    பரமத்திவேலூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20). பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் பயின்று வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

    சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது சிரஞ்சீவி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ராஜா வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அவருடன் வந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். பின்னர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ராஜவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர்.

    வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.

    • வாலிபர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
    • இவர்கள் மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராமர், லட்சுமணன். இவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி பகுதியில் தோட்டம் உள்ளது.

    இந்த இருவர் மற்றும் தந்தை மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வாலிபர்கள் இருவரும் சென்றனர். அங்கு வந்த வனத்துறையினரான பாரதி, பெரியசாமி உள்ளிட்ட 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை பிரதான சாலையில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த 2 வாலிபர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் ராமர், லட்சுமணன் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவருடன் மோதலில் ஈடுபட்ட என் மகனை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று மாணவரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    திருவொற்றியூரை சேர்ந்தவர் பாரதி. டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 22).

    2014-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மணிகண்டன் படிப்பை முடித்து விட்டு மணலியில் உள்ள பெட்ரோலிய கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வேறொரு கல்லூர் மாணவருடன் மோதலில் ஈடுட்டு வந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டு மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ந் தேதி மணிகண்டனை சென்ட்ரல் ரெயில் நிலையம அருகே ஏழுகிணறு போலீசார் கைது செய்தனர். அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று அழைத்து சென்றனர்.

    சுமார் 50 நாட்கள் ஜெயிலில் இருந்த மணிகண்டன் வெளியே வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மணிகண்டனிடன் தாய் பாரதி கூறியதாவது:-

    எனது மகன் கல்லூரியில் படித்த போது கடந்த ஆண்டு காமராஜர் சாலையில் மாநகர பஸ் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் அவனை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.

    அந்த சம்பவத்தில் அவனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தான். அதன் பிறகு ஜாமீனில் வந்த அவன் பெட்ரோலிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.

    கடந்த ஜூன் 18-ந் தேதி ஏழுகிணறு போலீசார் எங்களுக்கு போன் செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்தனர். உடனே நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து சென்றோம். அங்கு என் கண் முன்னேயே மணிகண்டனை போலீசார் தாக்கினார்கள். நான் போலீசாரை சமாதானப்படுத்தினேன்.

    எனது மகன் முழுமையாக மாறிவிட்டான். தற்போது அவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறான் என்று கூறினேன். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கு பின்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவன் மிகவும் சோகத்துடன் இருந்தான். குடும்பத்தின் பெயரை கெடுத்து விட்டதாக கூறி வேதனைப்பட்டான்.

    நான் ஒருமுறை தவறு செய்துவிட்டதாகவும், அதை வைத்து என்னை தவறாக சித்தரித்து விட்டனர். போலீசார் தனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறினான்.

    நாங்கள் அவனை சமாதானப்படுத்தினோம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறினார்.

    ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டன் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். போலீசார் யாரையும் ஆதாரம் இல்லாமல் கைது செய்வதில்லை.

    ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர் அதன்பிறகு தவறு செய்யவில்லை என்றால் அவரை விட்டுவிடுவோம் என்றனர்.

    ×