search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி படகு போக்குவரத்து
    X
    கன்னியாகுமரி படகு போக்குவரத்து

    கன்னியாகுமரியில் நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதம்

    கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதல் வங்கக்கடலில் நீர்மட்ட தாழ்வு ஏற்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதால் இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக படகு போக்குவரத்தும் நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது.

    விவேகானந்தா, குகன், பொதிகை என்ற 3 படகுகள் மூலம் சேவை நடந்து வருகிறது. தற்போது விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 படகுகள் மட்டுமே சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் வங்கக்கடலில் நீர்மட்ட தாழ்வு ஏற்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து நடைபெறும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    Next Story
    ×