search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat Service Delay"

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் திடீரென நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு சேவை தொடங்கப்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு சேவை நடத்தப்பட்டு வருகிறது.

    சனி,ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் படகில் செல்லவும், விவேகானந்தர் மண்டபத்தை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    இதற்காக காலை 7.30 மணி முதலே சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். இன்று அதிகாலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் வாங்க படகு குழாமில் காத்திருந்தனர்.

    அப்போது கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் திடீரென நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி சுற்றுலா பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது.

    மேலும் படகு குழாம் முன்பு கடலின் நீர் மட்டம் சீரான பின்பு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிப்பு வைக்கப்பட்டது. அதன்படி காலை 9.30 மணிக்கு மேல் கடல் நீர் மட்டம் சீரானது.

    அதன்பின்பு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு இச்சேவை தொடங்கப்பட்டது.
    ×