search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    போலி விசா கொடுத்து வாலிபரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி ரூ.5½ லட்சம் மோசடி

    போலி விசா கொடுத்து வாலிபரை வெளிநாட்டுக்கு அனுப்பி ரூ.5½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 43). இவர் அரியாங்குப்பத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அந்த நிறுவனத்திலேயே அவரது மனைவி கல்பனா தையல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே நைனார் மண்டபத்தை சேர்ந்த முத்துக்குமரன் (24) என்பவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல செல்வராஜை அணுகினார்.

    கடந்த ஆண்டு முத்துக்குமரனிடம் ரூ. 5½ லட்சம் பெற்றுக் கொண்டு அவரை கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.

    முத்துக்குமரன் கனடா நாட்டுக்கு சென்ற போது தனக்கு வழங்கிய விசா போலி விசா என்பதை அறிந்தார். எப்படியோ அங்கிருந்து முத்துக்குமரன் தப்பி புதுவை திரும்பினார்.

    இதையடுத்து போலி விசா கொடுத்து பண மோசடி செய்த செல்வராஜியிடம் கொடுத்த பணத்தை முத்துக்குமரன் திருப்பி கேட்டார். ஆனால், செல்வராஜ் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து முத்துக்குமரன் இதுபற்றி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தார்.
    Next Story
    ×