search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை
    X
    முல்லைப் பெரியாறு அணை

    பெரியாறு அணை நீர்மட்டம் 4 நாளில் 2 அடி உயர்வு

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக இடுக்கி, பெரியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

    நேற்று 113.60 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.85 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 782 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1524 மி.கன அடி. நீர் அணையில் உள்ளது.

    ஆசியாவிலேயே மிக உயரமான அணையான இடுக்கியில் கடந்த 3 நாட்களில் 7 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் மொத்த உயரம் 555 அடியாகும்.

    பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்படுகிறது. இதனால் 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 28.41 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 310 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 35.50 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.68 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 11.6, தேக்கடி, 5.2, கூடலூர் 2, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர்ந்து கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×