என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

  ஆத்தூர்:

  கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் குமுளிக்கு தனியார் சொசுகு பஸ் வந்தது. நள்ளிரவு சமயம் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்துப்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலை ஈரபதத்துடன் காணப்பட்டது.

  திடீரென டயர் வழுக்கி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததால் பயணிகள் அச்சம் அடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  கேரளா மாநிலம் மேலகுட்டத்தை சேர்ந்த மாலி என்ற பெண்ணுக்கு கையில் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்த விபத்து குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×