search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ் கவிழ்ந்தது"

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே புதுச்சேரியிலிருந்து தூத்துக்குடி சென்ற தனியார் ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பயணி ஒருவர் இறந்தார். 29 பேர் காயம் அடைந்தனர்.

    முத்துப்பேட்டை:

    புதுச்சேரியில் இருந்து 39 பயணிகளுடன் தூத்துக்குடி புறப்பட்ட தனியார் ஆம்னிபஸ், நேற்று இரவு முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் வழியாக பஸ் வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ் அடியில் சிக்கி காயல்பட்டினத்தை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் (72) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பஸ்சில் இருந்த 29 பயணிகளும் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக் டர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 12 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் முத்துபேட்டையை அடுத்த தம்பிகோட்டை கீழகாடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 28). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரது நண்பர் மணிபாரதி (25).

    இந்த நிலையில் நேற்று 2 பேரும், முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பாமணி ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அருகில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கர்ணன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். மணிபாரதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து பற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சின்னாளபட்டி:

    குமுளியில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. வத்தலக்குண்டு- செம்பட்டி ரோட்டில் வீரசிக்கம்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    இதில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் திருச்சியை சேர்ந்த சார்லஸ் (வயது29), கண்டக்டரான கூடலூரை சேர்ந்த கார்த்திக் (28), பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த பாலநாராயணன் (24), எரசக்கநாயக்கனூரை சேர்ந்த சதீஷ்குமார் (23) ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மாற்று பஸ் மூலம் திண்டுக்கல் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்றனர். 

    இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×