search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் ரூ.26,760-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 12-ந்தேதி ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 368 ஆக இருந்தது. பின்னர் விலை உயர்ந்தது.

    நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.26 ஆயிரத்து 904 ஆக இருந்தது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது. மேலும் இது புதிய உச்ச விலையாக இருந்தது.

    இந்த நிலையில் இன்று பவுனுக்கு ரூ.144 குறைந்தது. ஒரு பவுன் ரு.26 ஆயிரத்து 760 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.3,345-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.44-க்கு விற்கிறது.
    Next Story
    ×