search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் சூர்யா
    X
    நடிகர் சூர்யா

    ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன் - நடிகர் சூர்யா

    புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன் என நடிகர் சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்திலும்  புதிய கல்விக் கொள்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்

    இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சந்தேகங்களை 
    எழுப்பினார். அவருக்கு கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட பலர் ஆதரவளித்தனர். ஆனாலும், கல்வியை பற்றி பேச சூர்யாவுக்கு என்ன தகுதி இருக்கிறது போன்ற கருத்துக்களும் எழுந்தன. 

    இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன் என நடிகர் சூர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

    புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்விதான் உயர பறப்பதற்கான சிறகு. அது முறிந்துபோகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்.

    புதிய கல்விக் கொள்கையில் எல்லாவிதமான பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

    பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறிவிடக் கூடாது. சமமான தரமான இலவச கல்வியை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைகளை இணையத்தில் பதிவிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×