search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட புலித்தோல் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்
    X
    கடத்தப்பட்ட புலித்தோல் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்

    கூடலூர் அருகே கேரளாவுக்கு புலித்தோல் கடத்திய கும்பல் கைது

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரளாவுக்கு புலித்தோல் கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லை வண்டி பெரியாறு, வல்லக்கடவு வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது குமுளியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர்.

    அதில் புலித்தோல் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகாசியைச் சேர்ந்த நாராயணன் (வயது 71), கமுதியைச் சேர்ந்த சக்கரை (51), முருகன் (42), கொடைக்கானலைச் சேர்ந்த கருப்பையா (54), திருநெல்வேலியைச் சேர்ந்த ரத்தினவேல் (50) என தெரிய வந்தது.

    இவர்கள் கோட்டயத்தில் ஒருவருக்கு புலித்தோலை விற்பதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். வல்லக்கடவு வனச்சரகர் அஜிஸ் அவர்கள் 5 பேரையும் கைது செய்து புலித்தோல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    தமிழக - கேரள எல்லைப்பகுதியில் கூடலூர் அருகே பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு அன்னிய நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சரணாலய பகுதியில் புலி வேட்டையாடப்பட்டு அதன் தோல் கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×