search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang arrested"

    • வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.
    • போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பேரூர் ரோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    உடனடியாக போலீசார் 5 பேரில் 4 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அந்த கும்பல் முன் விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாக கரும்புக்கடையை சேர்ந்த அஜ்மல் கான் என்பவரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபரை காரில் கடத்திச் செல்ல காத்திருந்த திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார்(வயது27), திருப்பூர் பாலப்பாளையத்தை சேர்ந்த வெல்டர் விவேக்(29), திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(28), திருப்பூர் குறிச்சி நகரை சேர்ந்த தென்பாண்டி(22) என்பது தெரியவந்தது .

    பின்னர் போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ரைஸ் மில் அருகே ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு வெள்ளை சீட்டில் எண்கள் எழுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஆப்பக்கூடலை சேர்ந்த மணி (49), சித்தோட்டை சேர்ந்த தனசண்முகமணி (45), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (45), குமார் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • புதுவையில் சூதாட்டத்தை தடுக்கம் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சூதாட்டத்தை தடுக்கம் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வண்ணாங்குளம் பகுதியில் ஒரு கும்பலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.

    ஆனால், போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் வண்ணாங்குளம் புது தெருவை சேர்ந்த காண்டீபன் (வயது40) வம்பாபேட் பிரபு(40), மஞ்சக்குப்பம் அனீப்தீன் (37) கடலுார் எஸ்.புதுக்குப்பம் ஆறுமுகம்(39) என்பது தெரியவந்தது. பின்னர் 4பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.14, 380 பறிமுதல் செய்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து அவர்களை புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • ஜீவானந்த புரத்தில் வீட்டில் காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    ஜீவானந்த புரத்தில் வீட்டில் காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    புதுவை ஜீவானந்த புரம் எம்.ஜி.ஆர். வீதியில் ஒரு வீட்டில் பெரிய அளவில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ரமேஷ் (37) கதிரவன் (52) சிவா (56) சம்பத் ராஜ் (45) மற்றும் அனந்த புரத்தை சேர்ந்த சந்திர சேகரன் (35) வில்லியனூர் உருவையாறு பகுதியை சேர்ந்த பிரபு (31) தட்டாஞ்சாவடியை சேர்ந்த சங்கர் (56) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப்பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை கும்பல் அரிவாளால் வெட்டியது.
    • போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கே. புதூரைச் சேர்ந்த நாசர் (32). இவர் தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கே. புதூர் வந்துள்ளார்.

    இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உபேஸ்ரகுமான் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று உபேஸ் ரகுமான், ரகிப் நிஸ்டர், சேக்பரீத், ரமீஷ்ராஜா, பாசித் ஆகியோர் நாசரை வழிமறித்து கத்தியால் வெட்டினர்.

    இதில் பலத்த காயமடைந்த நாசர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால முத்தையா வழக்குப்பதிவு செய்து சேக்பரீத், ரமீஷ்ராஜா, பாசித், ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மது பாட்டில் விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    தேவதானப்பட்டி:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மது பானங்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கெங்குவார்பட்டியில் முத்துபாண்டி மனைவி ஆச்சியம்மாள் (48), தேவதானப்பட்டி தெற்கு தெருவில் சென்ராயன் (47), சில்வார்பட்டி வடக்கு தெருவில் தெய்வம் மனைவி செல்லம்மாள் (46), பிரகாஷ் (32), இ.புதுப்பட்டியில் முருகன் (44) ஆகியோர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

    போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 397 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கள்ள நோட்டு கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது ராஜதானி பகுதியில் 4 பேர் சந்தேகப்படும்படி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சட்டைப் பைகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உஷாரான போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ராஜதானி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் (வயது 21), வசந்தகுமார் (31), ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பாலு (31), திருப்பூர் புழுவபட்டியைச் சேர்ந்த குமரேசன் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. எனினும் கள்ள நோட்டுகளை எங்கிருந்து வாங்கி வந்தனர்? இதனை அச்சடித்தது யார்? இதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி வேனை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் அன்பு. சொந்தமாக சுற்றுலா வேன் நடத்தி வருகிறார். இவர் வேனை அன்பு கடந்த 2015-ம் வருடம் ஆந்திர மாநிலம் பீமவரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனிடம் விற்றார்.

    வேனை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மணிகண்டன் வாங்கினார். ஆனால் மணிகண்டன் வேனை தன் பெயரில் மாற்றி கொள்ளவில்லை. அன்புவின் பெயரிலியே வேன் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் மணிகண் டன் கடன் தொகையை சரிவர திருப்பி செலுத்த வில்லை. இதனால் நிதி நிறுவனம் அன்புவை தொடர்பு கொண்டு வேன் உங்களின் பெயரில் உள்ளதால் கடன் பாக்கியை செலுத்தும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தது. இது அன்புக்கு எரிச்சலை உண்டாக்கியது.

    இதுகுறித்து அவர் தனது நண்பர்களான நெல்லையை சேர்ந்த பால்ராஜ், திருநின்றவூரை சேர்ந்த அருணகிரி, கும்மிடிப் பூண்டியை சேர்ந்த அஜி ஆகியோரிடம் தெரிவித்தார்.

    அப்போது மணிகண்டனிடம் உள்ள வேனை கடத்தி மறைத்து வைத்துவிட்டு பாக்கி பணம் செலுத்தாததால் நிதி நிறுவனம் வேனை பறிமுதல் செய்து விட்டது என்று நாடகம் ஆட அவர்கள் முடிவு செய்தனர்.

    நேற்று மாலை கும்மிடிப்பூண்டி அருகே ஈக்குவார் பாளையத்தில் வந்த வேனை அன்பு உள்பட 4 பேரும் வழிமறித்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் அறிவழகன் என்பவரை அடித்து உதைத்து வேனை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து அறிவழகன் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உஷாரான போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். அப்போது கடத்தப்பட்ட வேன் லட்சிவாக்கம் வழியாக ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

    உடனே ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகே வேனை போலீசார் மடக்கினர். ஆனால் வேன் நிற்காமல் திருவள்ளூர் நோக்கி வேகமாக சென்றது.

    இதையடுத்து சுமார் 8 கிலோ மீட்டர் துரத்தி சென்று சீதஞ்சேரி பகுதியில் வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த அன்பு, பால்ராஜ், அருணகிரி, அஜி ஆகியோரை கைது செய்தனர்.

    கூடலூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 1-வது வார்டு அரசமர தெருவில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு இடத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பசும்பொன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (32) என்பவரை கைதுசெய்து அவரிடம் இருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கீழகூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் (55) என்பவர் தனது வீட்டு அருகே மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரையும் கைது செய்து 130 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவருடன் விற்பனையில் ஈடுபட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த மனோஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

    ×