search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி வேனை கடத்திய கும்பல் கைது
    X

    கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி வேனை கடத்திய கும்பல் கைது

    கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி வேனை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் அன்பு. சொந்தமாக சுற்றுலா வேன் நடத்தி வருகிறார். இவர் வேனை அன்பு கடந்த 2015-ம் வருடம் ஆந்திர மாநிலம் பீமவரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனிடம் விற்றார்.

    வேனை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மணிகண்டன் வாங்கினார். ஆனால் மணிகண்டன் வேனை தன் பெயரில் மாற்றி கொள்ளவில்லை. அன்புவின் பெயரிலியே வேன் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் மணிகண் டன் கடன் தொகையை சரிவர திருப்பி செலுத்த வில்லை. இதனால் நிதி நிறுவனம் அன்புவை தொடர்பு கொண்டு வேன் உங்களின் பெயரில் உள்ளதால் கடன் பாக்கியை செலுத்தும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தது. இது அன்புக்கு எரிச்சலை உண்டாக்கியது.

    இதுகுறித்து அவர் தனது நண்பர்களான நெல்லையை சேர்ந்த பால்ராஜ், திருநின்றவூரை சேர்ந்த அருணகிரி, கும்மிடிப் பூண்டியை சேர்ந்த அஜி ஆகியோரிடம் தெரிவித்தார்.

    அப்போது மணிகண்டனிடம் உள்ள வேனை கடத்தி மறைத்து வைத்துவிட்டு பாக்கி பணம் செலுத்தாததால் நிதி நிறுவனம் வேனை பறிமுதல் செய்து விட்டது என்று நாடகம் ஆட அவர்கள் முடிவு செய்தனர்.

    நேற்று மாலை கும்மிடிப்பூண்டி அருகே ஈக்குவார் பாளையத்தில் வந்த வேனை அன்பு உள்பட 4 பேரும் வழிமறித்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் அறிவழகன் என்பவரை அடித்து உதைத்து வேனை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து அறிவழகன் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உஷாரான போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். அப்போது கடத்தப்பட்ட வேன் லட்சிவாக்கம் வழியாக ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

    உடனே ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகே வேனை போலீசார் மடக்கினர். ஆனால் வேன் நிற்காமல் திருவள்ளூர் நோக்கி வேகமாக சென்றது.

    இதையடுத்து சுமார் 8 கிலோ மீட்டர் துரத்தி சென்று சீதஞ்சேரி பகுதியில் வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த அன்பு, பால்ராஜ், அருணகிரி, அஜி ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×