லாட்டரி சீட்டு விற்ற கும்பல் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்ற கும்பல் கைது
Published on

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ரைஸ் மில் அருகே ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு வெள்ளை சீட்டில் எண்கள் எழுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆப்பக்கூடலை சேர்ந்த மணி (49), சித்தோட்டை சேர்ந்த தனசண்முகமணி (45), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (45), குமார் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com