என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  கொடைக்கானலில் தொடர் மழையால் பொதுமக்கள் நிம்மதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

  கொடைக்கானல்:

  மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை மாதம் முடிந்த போதும் வறட்சியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

  கொடைக்கானல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரஞ்சிதம் சோலை அணை ஆகியவற்றின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கமும் அதிகரித்ததால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்தன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ்மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் பொழுதில் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

  இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. இதனால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட அனைத்து நீர் வீழச்சிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

  மேலும் அணைகளின் நீர்மட்டம் உயர்வதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

  Next Story
  ×