search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொல்காப்பியர் சதுக்கம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்
    X
    தொல்காப்பியர் சதுக்கம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்

    தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அணைக்கரையில் 45 மி.மீ. பதிவானது.
    தஞ்சாவூர்:

    கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை கொட்டியது. அரைமணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது மழை கொட்டியது. இந்த மழையால் தஞ்சை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்தது. காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மதியத்துக்கு பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 5.15 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்திலேயே வலுவாக பெய்ய தொடங்கிய மழை அரைமணி நேரத்திற்கு மேல் இடைவிடாது கொட்டியது. தொடர்ந்து 2 நாட்களாக தஞ்சையில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

    அணைக்கரை-45, தஞ்சை-42, பூதலூர்-29, திருவையாறு-24, அதிராம்பட்டினம்-22, பாபநாசம்-20, அய்யம்பேட்டை-17, திருக்காட்டுப்பள்ளி-17, மஞ்சளாறு-14, திருவிடைமருதூர்-12, வல்லம்-11, கல்லணை-1.
    Next Story
    ×