search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை (கோப்புப்படம்)
    X
    மழை (கோப்புப்படம்)

    ஆத்தூர் பகுதியில் கனமழை- விவசாயிகள் மகிழ்ச்சி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்ததுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆத்தூர் பகுதியில் கடந்த 1 3-ந் தேதி பெய்த கன மழையால் முட்டல் அருவியில் தண்ணீர் கொட்டியது.

    இந்தநிலையில் ஆத்தூர் பகுதியில் நேற்றும் கனமழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது.

    ஆத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்வதால் அந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்ததுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் புழுக்கத்தில் தவித்த மக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டது. இதனால் கனமழை பெய்யும் என்று பொது மக்கள் எதிர்பார்த்த நிலையில் மழை பெய்யாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக ஆத்தூரில் 54.4 மி.மீ. மழை பெய்துள்ளது. கெங்கவல்லியில் 6.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 60.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்த படி இருந்தது.
    Next Story
    ×