என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  கோவையில் வெல்டிங் தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் வெல்டிங் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

  கோவை:

  கோவை கோவில் பாளையம் அருகே உள்ள வெள்ளானைபட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 47). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். 

  அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் தங்க செயின், மோதிரம், வளையல், கம்மல் உள்பட 7ž பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டிவி, ரூ.34 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து அப்துல்ரகுமான் கோவில்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

  Next Story
  ×