search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீல் வைப்பு
    X
    சீல் வைப்பு

    அனுமதியின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு

    புதுவை அருகே அனுமதியின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்.
    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டை சேர்ந்தவர் ரங்கராஜுலு. இவர் புதுவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக பகுதியான பூத்துறையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    ஆனால், இந்த நிறுவனத்துக்கு தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் சென்றது.

    இதையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேலு மற்றும் வருவாய் துறையினர் நேற்று அந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.

    அப்போது அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு இந்த நிறுவனம் டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த நிறுவனத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக நிறுத்தி இருந்த 2 டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×