search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் தொழிற்சாலை"

    • உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.
    • தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து சுற்று சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதனை சரி செய்துள்ளது. இந்த வாயு கசிவால் 18 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.

    அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியபட்டது. எனவே விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரிசெய்யபட்டது.

    அந்த தனியார் தொழி சாலை ரெட் கேட்டகிரியில் உள்ளது. இதே போல ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அதே சமயம் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதனை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லூனர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    இரவில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அங்கு உள்ளனர். மேலும் அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. சல்ப்யூரிக் ஆசிட் பிளாண்ட் மட்டும் உடனடியாக மூட முடியாது என்பதால் படிப்படியாக மூடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது போன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். அங்கு மட்டும் அல்லாமல், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் இந்த ஆய்வு தமிழக முழுவதும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
    • 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல்-திருநகரி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் எடமணல் கிராமத்தில் நடைபெற்றது ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் தார் பிளாண்ட் தொழிறடசாலையை தடை செய்வதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பது, தார் பிளாண்ட் தடை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கேட்டு பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த மீட்டு பக்தா, சுரேந்தர் தாஸ், கபில் திவாரி ஆகியோர் பழைய இரும்பு துண்டுகளை பாய்லரில் தூக்கி போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்து திடீரென இரும்பு துண்டுகள் 3 பேர் மீதும் விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த மீட்டு பக்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரையும் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ×