search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம்
    X

    தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம்

    அதிமுக சார்பில் மழை வேண்டி மதுரை, கரூர், ஈரோடு, கும்பகோணம், கோவை, திருவாரூர், சென்னை ஆகிய இடங்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    இந்நிலையில், மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுகவினர் யாகம் நடத்தி வருகின்றனர். 

    சென்னை பூவிருந்தவல்லி வைத்தீஸ்வரன் கோயிலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது.

    சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடத்தப்பட்டது.

    கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 

    கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 



    நாமக்கல் கொக்கராயன்பேட்டை பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் அமைச்சர் தங்கமணி தலைமையில் யாகம் நடத்தப்பட்டது. 

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த வருண யாகத்தில் அமைச்சர் காமராஜ் பங்கேற்றார்.

    காட்டுநாயனப்பள்ளி என்ற இடத்தில் முருகன் கோயிலில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், முன்னாள் எம்.பி. அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மழைவேண்டி நடத்தப்பட்ட யாக பூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த யாகத்தில் அமைச்சர் சரோஜா பங்கேற்றார்.  இந்த யாக பூஜையில் ஏராளாமான அதிமுகவினரும் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×