என் மலர்

  செய்திகள்

  அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலி
  X

  அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலியானார்.

  புதுச்சேரி:

  அரியாங்குப்பம் சண்முகாநகர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது57). சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது தாய் மனோரஞ்சிதத்துடன் (70) மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

  கிழக்குகடற்கரைசாலையில் கொக்குபார்க்கில் வந்த போது ரெட் சிக்னல் விழுந்ததால் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் கிரீன் சிக்னல் விழுந்ததால் ராஜேந்திரன் புறப்பட தயாரானார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி மனோரஞ்சிதம் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோரஞ்சிதத்தை அவரது மகன் ராஜேந்திரன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மனேரஞ்சிதம் பரிதாபமாக இறந்து போனார்.

  இந்த விபத்து குறித்து வடக்குபகுதி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×