search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிப்பெண் குறைவாக எடுத்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தற்கொலை
    X

    மதிப்பெண் குறைவாக எடுத்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தற்கொலை

    திருப்பூர் அருகே மதிப்பெண் குறைவாக எடுத்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். #SSLCExam
    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பனியன் தொழிலாளி. இவரது மகன் சிவசுப்பிரமணியம் (15). இவர் இடுவம் பாளையத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி இருந்தார்.

    நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவன் சிவசுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் தேர்வு முடிவை பார்க்க சென்றார். அப்போது அவர் 247 மதிப்பெண்ணே பெற்று இருப்பது தெரிய வந்தது.

    அதிக மதிப்பெண் பெறுவேன் என ஆவலுடன் இருந்த சிவசுப்பிரமணியம் குறைவான மதிப்பெண் பெற்று இருந்ததால் மனம் உடைந்தார். அவர் அழுது புலம்பியபடி காணப்பட்டார். அவரை சக நண்பர்கள் பெற்றோர் சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் சமாதானம் அடையவில்லை. நேற்று இரவு மாணவன் சிவசுப்பிரமணியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிவ சுப்பிரமணியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #SSLCExam
    Next Story
    ×