search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதிய ஜனதாவுக்கு எதிரான 3-வது அணியை ஆதரிக்க மாட்டோம் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி
    X

    பாரதிய ஜனதாவுக்கு எதிரான 3-வது அணியை ஆதரிக்க மாட்டோம் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி

    பாரதிய ஜனதாவுக்கு எதிரான 3-வது அணியை ஆதரிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #Kbalakrishnan #BJP

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்படுகிறது. வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

    பா. ஜனதா- அ.தி.மு.க. அரசுக்கு வருகிற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பா.ஜனதா அரசுக்கு எதிரான 3-வது அணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஏனென்றால் அது பா.ஜனதா நிறுத்தும் மற்றொரு அணியாகதான் கருத முடியும்.

    மத சார்பற்ற கட்சிகளுக்கு தான் எங்கள் ஆதரவு உண்டு. அந்த வகையில் தி.மு.க.- காங்கிரஸ் ஒன்றாகபாடுபடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு ரூ.1கோடியை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும். அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதை கண்டுபிடித்த பிறகும் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் மாத்திரைகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

    வெளி உலகுக்கு தெரிந்த பிறகே ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த விசயத்தை திட்டமிட்டு மறைத்த டாக்டர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kbalakrishnan #BJP

    Next Story
    ×