என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகமலை புதுக்கோட்டையில் ஐகோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்11 Oct 2018 4:41 PM GMT (Updated: 11 Oct 2018 4:41 PM GMT)
மதுரை ஐகோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை சுப்பிர மணியசிவா தெருவைச் சேர்ந்தவர் ராஜையா (வயது56). இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜையா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தொண்டிக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜையா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×