search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமாவை மிஞ்சும் சம்பவம்: மதுரையில் கல்லூரி மாணவி கத்திமுனையில் கடத்தல்
    X

    சினிமாவை மிஞ்சும் சம்பவம்: மதுரையில் கல்லூரி மாணவி கத்திமுனையில் கடத்தல்

    மதுரையில் கத்திமுனையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்க விரட்டி சென்ற தந்தை மீது ஆட்டோவை மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    சினிமாவை மிஞ்சும் வகையில் மதுரையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மதுரை நாகமலை புதுக்கோட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஜெயபாரதி (வயது19). இவர் பரவையில் உள்ள தனியார் கல்லூரில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஜெயபாரதி அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரை செல்லூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் அஜித் குமார் (24) மற்றும் சிலர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயபாரதியை ஆட்டோவில் கடத்த முயன்றனர். அப்போது அவர் கூச்சலிட்டார்.

    இந்த நேரத்தில் வீட்டில் இருந்த ஜெயபாரதியின் தாயார் செல்வி ஓடி வந்து மகளை மீட்க முயன்றார். அப்போது அஜித்குமார் கத்தியை காட்டி, ‘கிட்டே வந்தால் கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி ஜெயபாரதியை ஆட்டோவில் கடத்தி சென்று விட்டார்.

    பதட்டம் அடைந்த செல்வி அவரது கணவர் கணேசனுக்கு சம்பவம் குறித்து செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக வீட்டுக்கு வந்த கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டோ சென்ற பாதையில் விரைந்து சென்று தேடினார்.

    ஜெயபாரதியை கடத்திய ஆட்டோ துவரி மான் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த கணேசன் ஆட்டோவை மறிக்க முயன்றார். அப்போது ஆட்டோவில் இருந்த அஜித்குமார் உள்ளிட்ட கும்பல் கணேசன் மீது ஆட்டோவை மோதியது.

    நிலைகுலைந்து கணேசன் கீழே விழுந்தார். பின்னர் ஆட்டோவில் அஜித்குமார் ஜெயபாரதியை கடத்திக் கொண்டு தப்பி விட்டார்.

    இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. காயம் அடைந்த கணேசன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாணவி ஜெயபாரதியை கடத்தி சென்ற அஜித்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×