search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து முடங்கிய நிலையில் சென்னை மக்களுக்கு கை கொடுத்த மின்சார ரெயில்
    X

    போக்குவரத்து முடங்கிய நிலையில் சென்னை மக்களுக்கு கை கொடுத்த மின்சார ரெயில்

    அனைத்து போக்குவரத்தும் முடங்கி நிலையில் சென்னை மக்களுக்கு மின்சார ரெயில் கைக்கொடுத்தது. அலுவலகங்கள், கடைகள் மூடப்பட்டதால் கூட்டம் இல்லாமல் ஓடியது
    சென்னை:

    கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சென்னையில் நேற்று மாலை முதல் போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து அரசு வெளியூர் பஸ்களும் நிறுத்தப்பட்டன. ஆம்னி பஸ்களும் இயக்கப்படவில்லை.

    இன்று நகரம் முழுவதும் பஸ், ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின. ஆனால் மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு சென்றன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மின்சார ரெயில், சேவை இன்றுகளை இழந்தது. மின்சார ரெயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் கூட்டம் இல்லாததால் காலியாக ஓடின.

    மின்சார ரெயில் நிலையங்கள் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு ஆலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விப்பட்டதால் மக்கள் கூட்டம் இல்லை.

    ஒவ்வொரு மின்சார ரெயிலிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வழக்கமாக பயணித்த நிலையில் இன்று 50 சதவீதத்திற்கு குறைவாகத்தான் பயணம் செய்துள்ளனர்.

    கடற்கரை- தாம்பரம், கடற்கரை- வேளச்சேரி, மூர்மார்க்கெட்- திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட அனைத்து புறநகர் மின்சார ரெயில்களும் கூட்டமின்றி ஓடின.



    அதேபோல மெட்ரோ ரெயில் சேவையும் இன்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. மெட்ரோ ரெயிலில் குறைந்த அளவிலான பயணிகள் பயணம் செய்தனர்.

    சென்னையில் அனைத்து போக்குவரத்துகளும் முடங்கிய நிலையில் புறநகர் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு கை கொடுத்தன.
    Next Story
    ×