search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக்கால் கோடிக்கணக்கில் இழப்பு
    X

    குமரி மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக்கால் கோடிக்கணக்கில் இழப்பு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 2-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடித்தது.
    நாகர்கோவில்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 2-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடித்தது.

    குமரி மாவட்டத்திலும் லாரிகள் ஓடவில்லை. லாரிகள் அனாதை மடம் மைதானத்திலும், கோட்டார் பகுதியில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், சொந்த இடங்களிலும் நிறுத்தி வைத்திருந்தனர். லாரிகள் ஓடாததால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்கள், ரப்பர் சீட்டுகள், ரப்பர் பால், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வில்லை. இதனால் கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    இதனால் இவை அனைத்தும் தேக்கம் அடைந்து உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் லாரிகள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வராததால் கோட்டார் மார்க்கெட் பகுதிகளையிழந்து காணப்பட்டது. அப்டா மார்க்கெட், கனக மூலம் சந்தைக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் குறைவான அளவே வந்தன. இதனால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து லாரி உரிமை யாளர் சங்கத்தின் செயலாளர் மனோகரன் கூறியதாவது:-

    எங்களது பிரச்சினைக்கு முடிவு காணும் வரை நாங்கள் லாரிகளை இயக்க மாட்டோம். குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாததால் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பருப்பு, உளுந்து பொருட்களும் வெளியூர்களில் இருந்து வராததால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். என்றார்.
    Next Story
    ×