search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வேல்முருகனை மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
    X

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வேல்முருகனை மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.#MKStalin #DMK
    செங்குன்றம்:

    மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வேல்முருகனை சந்தித்து நலம் விசாரித்தார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். சிறையில் அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தை கைவிட்டார்.

    அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புழல் ஜெயில் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. வேல்முருகனை நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். வேல்முருகன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.#MKStalin #DMK
    Next Story
    ×