search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே மணல் கடத்தல் டிராக்டர் மோதி சிறுவன் பலி
    X

    பொன்னேரி அருகே மணல் கடத்தல் டிராக்டர் மோதி சிறுவன் பலி

    பொன்னேரி அருகே மணல் கடத்தல் டிராக்டர் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கோகுல் (வயது 3½).

    இன்று அதிகாலை பாபுவின் தம்பி சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவன் கோகுலை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார்.

    அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் கோகுல் பரிதாபமாக இறந்தான். சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரும்பேடு ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் முருகன் (34). அதே பகுதியில் கிழக்கு கடற்கரையை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த கார் முருகன் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×