என் மலர்

  செய்திகள்

  கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்ய பரிசீலிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
  X

  கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்ய பரிசீலிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கொடுக்கப்படும் புகார்களை விசாரித்து, அந்த தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Cooperativeelections
  சென்னை:

  கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடு நடப்பதால், வேலூர் மாவட்டம் தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 31 சங்கத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

  அந்த வழக்கு மனுவில், ‘இந்த தேர்தலில் அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் திட்டமிட்டே நிராகரித்து விடுகின்றனர். அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

  இந்த வழக்குகள் நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு குறித்து, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர்கள் புகார் அளிக்க வேண்டும்.

  இந்த புகார்களை விசாரித்து, தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை வருகிற 10-ந்தேதி ஐகோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.  #Cooperativeelections

  Next Story
  ×